மருத்துவ கலந்தாய்வுக்கு வெளி மாநிலத்தவரை அழைத்தது ஏன்? | உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி | Medical consultation |
#CaptainNews |
#TamilNews
தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வுக்கு வெளி மாநிலத்தவரை அழைத்தது ஏன்? என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வில் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்றதாக, மதுரையை சேர்ந்த சோம்நாத், நேயா, ஸ்ரீலயா உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களை தாக்கல் செய்தனர்.
அதில் தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவ கல்லூரிகளில், 85 சதவீத இடங்கள் மாநில மாணவர்களுக்கும், 15 சதவீத இடங்கள் பிற மாநில மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்து 744 இடங்கள் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் 126 வெளிமாநில மாணவர்கள் பங்கேற்றிருப்பதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு ஏற்கனேவே விசாரணைக்கு வந்தபோது, வெளி மாநில மாணவர்கள் என கூறப்படும் 126 மாணவர்களை வழக்கில் சேர்த்த நீதிமன்றம், அவர்களின் இருப்பிடச்சான்று குறித்தும், எதன் அடிப்படையில் அவர்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டனர் என்பது குறித்தும் பதிலளிக்க உத்தரவிட்டது.இந்நிலையில் நீதிபதி சுரேஷ்குமார் முன்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முறையாக பரிசீலிக்கப்பட்ட பிறகே, கலந்தாய்விற்கான அழைப்பு விடுக்கப்பட்டதாக அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது. இதனை கேட்ட நீதிபதி, பலர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், வெளிமாநிலங்களில் நிரந்தரமாக குடியேறியவர்களாக உள்ளனர் எனக் குறிப்பிட்டார்.அவர்களுக்கு எந்த அடிப்படையில் தமிழகத்தில் இருப்பிட சான்று வழங்கப்பட்டது? எனக் நீதிபதி கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, அரசுத்தரப்பு மற்றும் கலந்தாய்வில் பங்கேற்ற பிற மாநில மாணவர்கள் என கூறப்படும் 126 பேரும் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net
மருத்துவ கலந்தாய்வுக்கு வெளி மாநிலத்தவரை அழைத்தது ஏன்? | உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி live tamil news 7 tv channels | |
| 2 Likes | 2 Dislikes |
| 73 views views | 133K followers |
| News & Politics | Upload TimePublished on 26 Aug 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét