
கோவை மாவட்டம் சூலூர் தொகுதிக்குட்பட்ட சூலூர் ஒன்றியம், சுல்தான் பேட்டை ஒன்றியம், சூலூர், இருகூர், கண்ணம்பாளையம், பள்ளபாளையம், கருமத்தம்பட்டி, சாமளாபுரம் பகுதிகளில் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளை தேமுதிகவினர் சிறப்பாக கொண்டாடினர்.
சின்னியம்பாளையம் ஊராட்சியில் சிவன் கோவிலில் சிறப்பு பூஜையும் கேப்டன் பெயரில் அர்ச்சனையும் செய்யப்பட்டது. கழக கொடியேற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சூலூர் ஒன்றிய செயலாளர் ரவிக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் முருகன் மாநில போக்குவரத்து பிரிவு செயலாளர் சி..டி.சி. ரவி, சூலூர் ஒன்றிய பொருளாளர் திருஞானம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சூலூர் நகரம் சார்பில் நகர செயலாளர் செந்தில் தலைமையில் கோவிலில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. பொதுமக்களுக்கு இனிப்புகள், மரக்கன்றுகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. நகர தேமுதிக ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் கேப்டன் பிறந்தநாளையொட்டி ஒரு நாள் முழுவதும் இலவச ஆட்டோ சேவை வழங்கப்பட்டது. விழாவில் நகர பொருளாளர் மருதமுத்து, துணை அவைத்தலைவர் ஸ்டீபன், செயலாளர்கள் இளங்கோ, பேச்சியன்னான், பூபதி மற்றும் பாலன் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இருகூர் நகர தேமுதிக செயலாளர் வசந்த்குமார் தலைமையில் நகர அவைத்தலைவர் முருகையன் முன்னிலையில் அப்பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கழக கொடியேற்றப்பட்டு, காமாட்சிபுரம் பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.
கோவை தெற்கு மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட செஞ்சேரி பிரிவு, செஞ்சேரி, பச்சாபாளையம், சந்தமநாயகன்பாளையம், செஞ்சேரிமலை, வங்கபாளையம், குமாரபாளையம், செசேரிபுத்தூர், ஜல்லிபட்டி, ஓடக்கல்பாளையம், பூரண்டாம்பாளையம் ஆகிய பகுதிகளில் கழக கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. அப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது. சின்னகுயிலி கிராமத்தில் செல்வவினாயகர் திருக்கோவிலில் கேப்டன் பெயரில் அர்ச்சனையும் அவரின் குடும்பத்தாரின் பெயர்களில் அர்ச்சனை செய்யப்பட்டு விஷேச பூஜைகள் நடைபெற்றன. மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட துணை செயலாளர் தனலட்சுமி ஆனந்த், மாவட்ட கேப்டன் மன்ற துணை செயலாளர் சதாசிவம், ஒன்றிய கழக செயலாளர் ஆறுச்சாமி, அவைத்தலைவர் கந்தசாமி, மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net
கோவை மாவட்டம், கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள் கொண்டாட்டம் | DMDK | கேப்டன் பிறந்த நாள் vijayakanth part | |
82 Likes | 82 Dislikes |
2,725 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 27 Aug 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét