![கேப்டன் பிறந்தநாளை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட இடங்களில் அன்னதானம் தேமுதிக சார்பில்](https://i.ytimg.com/vi/pQWD8mOUQ8U/maxresdefault.jpg)
#CaptainNews | #TamilNews
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் நாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட தேமுதிகவினர் 200க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சிக்கொடி ஏற்றியும், அன்னதானம் வழங்கியும் வெகு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.கேப்டன் பிறந்தநநாளையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி, ஏழை எளியவர்களுக்கு தங்களால் இயன்ற அன்னதானமும், பொருளுதவியும் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.திருப்பூர் செட்டிபாளையம் பகுதி கழக செயலளாளர் வீரமணி தலைமையில் புதிய பேரூந்து நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் முத்துவெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு கட்சிகொடி ஏற்றவைத்து புதிதாக அமைக்கப்பட்ட கல்வெட்டை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பும் அண்ணதானமும் வழங்கினார்.இதனை தொடரந்து மத்தியப்பகுதிகழக செயலாளர் பார்த்தீபன் தலைமையில் நடைபெற்ற நிகழச்சியில் மாவட்ட செயலளார் முத்துவெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.அதனை தொடர்ந்து கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்த மகளிர் மற்றும் தொண்டர்கள் விஜயகாந்தின் உடல் பூரண குணமடையவேண்டி மாகாளியம்ன் கோவிலில் சிறப்பு பிறார்த்தனை செய்தனர்.அதேபோன்று நெருப்பெருச்சல் பகுதிக்கழக செயலாளர் செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழச்சியில் கலந்து கொண்ட மாவட்ட யெலளார் முத்துவெங்கடேஸ்வரன் அங்கு புதிதாக அமைக்கப்பட்டிருந்த கழகக்கொடி கம்ப கல்வெட்டை திறந்து வைத்து கொடியேற்றி இனிப்பும் வழங்கினார்இதே போல் அவிநாசி, தாராபுரம், காங்கேயம், ஊத்துகுளி, உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், மங்கலம், பெருமாநல்லூர் உள்ளிட்ட மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் கேப்டன் விஜயகாந்தின் பிறந்த நாளை ஒட்டி, கழக நிர்வாகிகள் மற்றம் தொண்டர்கள் கோவில்களில் சிறப்பு பிறார்தனை செய்தும், ஆர்வமுடன் கட்சிக்கெடியை ஏற்றிவைத்து இனிப்பும், அண்ணதானமும் வழங்கி மகிழ்ந்தனர்
இந்நிகழச்சிகளில் மாவட்டத்துணைச்செயலாளர்கள், ராமகிருஷ்ணனர், சரவணன், தொழிற்சங்க செயலாளர் திவ்யாபாலு மற்றும் மாநில, மாவட்ட , ஒன்றிய, பகுதி, நகர கழக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அமைப்பு நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net
கேப்டன் பிறந்தநாளை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட இடங்களில் அன்னதானம் தேமுதிக சார்பில் | |
43 Likes | 43 Dislikes |
860 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 28 Aug 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét