![தமிழகம் முழுவதும் வருவாய் உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு camera iphone 8 plus apk](https://i.ytimg.com/vi/i7XMSBLehsU/maxresdefault.jpg)
#CaptainNews | #TamilNews
தமிழகம் முழுவதும் வருவாய் உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் கடிதம் எழுதியுள்ளார். அதில்,
தமிழகத்தில் நிலவக்கூடிய வருவாய் உதவியாளர் உத்தேச காலிப் பணியிடங்கள் குறித்த தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. நேரடி நியமனம் மூலம் நியமிக்கக்கூடிய இடங்களில் 91 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கான ஆட்கள் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திடம் கோரப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 31 இடங்களும், திருவண்ணாமலை, வேலூரில் முறையே 18, 25 இடங்களும் உள்ளன.
இந்த ஆண்டில் பதவி உயர்வின் மூலம் நிரப்பக்கூடிய ஆயிரத்து 384 வருவாய் உதவியாளர் காலிப் பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net
தமிழகம் முழுவதும் வருவாய் உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு camera iphone 8 plus apk | |
2 Likes | 2 Dislikes |
89 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 24 Aug 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét