![பாலியல் வன்கொடுமை குறித்து ஓவியம் தீட்டும் 6 ஆம் வகுப்பு மாணவனின் ஒரு சிறிய செய்தித்தொகுப்பு.. camera iphone 8 plus apk](https://i.ytimg.com/vi/hJbnVVd59FQ/maxresdefault.jpg)
சென்னை போரூரில் வசித்து வரும் ஷ்யாம் சுந்தர்-தனலட்சுமி தம்பதியின் 11 வயது மகன் லோசன். சிறு வயது முதலே ஓவியக்கலையில் அதிக நாட்டம் இருந்ததைக் கண்ட பெற்றோர்கள் ஓவிய ஆசிரியர் மணி என்பவர் மூலம் லோசனுக்கு பயிற்சியளித்து வந்தனர்.இந்த நிலையில் காஷ்மீர் மாநிலம் கதுவாவில் சிறுமி பாலியல் கொலை செய்யப்பட்டது குறித்து ஓவிய ஆசிரியர் மணி, மாணவன் லோசனிடம் கூறியுள்ளார். ஒரு குழந்தைக்கு நேர்ந்த கொடுமை இன்னொறு குழந்தைக்கு ஏற்படக் கூடாது என்பது குறித்த கருத்துடைய ஓவியங்களை வரைய வைத்துள்ளார் .
ஓவிய ஆசிரியர் அளித்த உத்வேகத்தில் ஓவியங்களை வரைய தொடங்கிய லோசன், கடந்த ஆறு மாதங்களாக குழந்தைகள் பாலியல் வன்கொடுமை குறித்த 20-கும் மேற்பட்ட வண்ணமயமான ஓவியங்களை நேர்த்தியாகவும், கலை நயத்துடன் வரைந்துள்ளான்.
இந்த ஓவியங்களை பொதுமக்களின் பார்வைக்கு எடுத்து செல்லும் விதமாக "விழித்தெழு" என்ற தலைப்பில் ஓவியக் கண்காட்சியாக லோசனின் பெற்றோர் மற்றும் அவனது ஓவிய ஆசிரியர் ஏற்பாடு செய்துள்ளனர்.மயிலாப்பூர் சிஐடி காலனியிலுள்ள சோல்ஸ்பைஸ் ஆர்ட் கலரியில் நடைபெறும் இந்த ஓவியக் கண்காட்சியினை சென்னை எழும்பூர் அரசு ஓவியக் கல்லூரியின் முன்னாள் தலைவரும், புகழ் பெற்ற ஓவியருமான ராதாகிருஷ்ணன் நடேசபிள்ளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.இச்சிறுவயதில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை குறித்தும், விவசாயிகளின் துயரம் குறித்தும் அவன் வரைந்துள்ள ஓவியங்களை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு களித்து மாணவன் லோசனை பாராட்டி சென்றனர்.இந்த ஓவியங்கள் மட்டுமல்லாது பென்சில் ஆர்ட் எனப்படும் பென்சிலினால் மட்டுமே மாணவன் லோசன் வரைந்த மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு,அப்துல் காலம் போன்ற தலைவர்களின் ஓவியங்களையும், சினிமா மற்றும் விளையாட்டில் புகழ் பெற்ற பலரது ஓவியங்களையும் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளனர். இச்சிறுவயதில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை மற்றும் விவசாயிகளின் துயரம் குறித்தும் கண்ணை மட்டுமல்லாமல் மனதையும் கவரும் வகையில் ஓவியங்கள் தீட்டியுள்ள மாணவன் லோசனை நாமும் பாராட்டுவோம்
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net
பாலியல் வன்கொடுமை குறித்து ஓவியம் தீட்டும் 6 ஆம் வகுப்பு மாணவனின் ஒரு சிறிய செய்தித்தொகுப்பு.. camera iphone 8 plus apk | |
7 Likes | 7 Dislikes |
241 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 22 Sep 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét